பொருளாதர நிலைமாற்றம் சட்டமூலத்தில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன கடந்த வெள்ளிக்கிழமை (09) தனது கையொப்பத்தையிட்டு சான்றுரைப்படுத்தியுள்ளதாக, பாராளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் இன்று தெரிவித்துள்ளது.
பொருளாதர நிலைமாற்றம் தொடர்பான தேசிய கொள்கைக்கான ஏற்பாடுகளை செய்வதற்கு நோக்கமாகக் கொண்ட இந்த சட்டமூலம் 2024 மே 22 ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
அதனையடுத்து 2024 ஜூலை 25 ஆம் திகதி பாராளுமன்றத்தில் இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இடம்பெற்றது. இதன்போது சட்டமூலம் வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
அதற்கமைய, இந்த சட்டமூலம் 2024 ஆம் ஆண்டின் 45 ஆம் இலக்க பொருளாதர நிலைமாற்றம் சட்டம் என அழைக்கப்படும்.