தென்னாபிரிக்காவுக்கான ‘Miss South Africa 2024’ அழகிப் போட்டியில் காது கேட்காத 28 வயதான Mia le Roux எனும் பெண் வாகை சூடியுள்ளார்.
இவர், இப்பட்டத்தை வென்றுள்ள முதலாவது காது கேட்காத பெண் ஆவார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
தனது வெற்றி, சமூகத்திலிருந்து ஒதுக்கப்பட்ட தன்னைப் போன்றோர் தங்களின் மிகப் பெரிய கனவுகளை நனவாக்க ஊக்குவிக்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், நிதி நிலவரத்தால் ஒதுக்கப்பட்டவர்கள், மாற்றுத் திறனாளர்கள் ஆகியோருக்குத் தான் உதவ எண்ணம் கொண்டுள்ளதாக கூறினார்.
ஒரு வயதில் காது கேட்காமல் போன இவருக்கு மேற்கொள்ளப்பட்ட ‘கொஹ்லியர் இம்பிளான்ட்’ சிகிச்சை மூலம் ஒலிகளை அறிய முடிவதாகவும், தான் பேசத் தொடங்க, ஈராண்டுகளுக்குப் பேச்சு சிகிச்சை பெறவேண்டியிருந்ததாகவும் தெரிவித்தார்.