Home » கட்டுமானத் துறையில் உயர் தரத்தை அமைக்க இணைந்த Swisstek Ceylon PLC மற்றும் சமரி அத்தபத்து

கட்டுமானத் துறையில் உயர் தரத்தை அமைக்க இணைந்த Swisstek Ceylon PLC மற்றும் சமரி அத்தபத்து

by Rizwan Segu Mohideen
August 11, 2024 11:12 am 0 comment

50 வருடங்களுக்கும் அதிக வரலாற்றைக் கொண்ட, இலங்கையின் கட்டுமானத் துறையில் முன்னோடியாக விளங்கும் Swisstek Ceylon PLC நிறுவனம், இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் உத்வேகமான தலைவியும், உலகின் முன்னணி மகளிர் கிரிக்கெட் வீராங்கனையுமான சமரி அத்தபத்துவுடன் ஒரு அற்புதமான பங்காளித்துவத்தை அறிவிப்பதில் பெருமிதம் கொள்கிறது. இந்நிறுவனம் Tile Adhesive மற்றும் Tile Grout ஆகிய உற்பத்திகளில் சந்தையில் முன்னணியில் திகழ்வதோடு, அதன் சந்தைப் பிரிவில் SLS சான்றிதழைப் பெற்ற முதலாவது வர்த்தக நாமமாகவும் விளங்குகின்றது. இவை உயர் தரத்தைப் பேணுவதற்காக நிறுவனம் கொண்டுள்ள உறுதிப்பாட்டை எடுத்துக் காட்டுகிறது.

இலங்கையின் மீண்டுவரும் நிர்மாணத் துறையை வெற்றியை நோக்கி கொண்டு செல்வதற்கும், வாழ்விடங்களில் நீண்ட தரம் மற்றும் ஆயுளில் கவனம் செலுத்தும் ஒரு நிறுவனம் எனும் வகையில் கட்டுமானம், புனரமைப்பு நடவடிக்கைகளில் முக்கிய முடிவுகளை எடுப்பதிலான விடயங்களில் முன்னின்று ஈடுபடுவதில் ஆண், பெண் இருபாலர்களையும் வலுவூட்டுவதற்கும், ஆண்களை அதிகம் கொண்ட தொழில்துறையில் செல்வாக்கு கொண்ட பெண் ஒருவரைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த முயற்சியில் துணிச்சலான நடவடிக்கையை நிறுவனம் எடுத்து வருகிறது.

தலைமைத்துவம், சிறந்து விளங்குதல், முடிவெடுத்தல் ஆகியவற்றில் முக்கிய விடயங்களைப் பகிர்ந்து கொள்வதன் மூலம், சமரி அத்தபத்து மற்றும் Swisstek Ceylon PLC நிறுவனம் ஆகிய இரு தரப்பினரும் அந்தந்த துறைகளில் மிக உயர்ந்த தரத்தை அமைத்துள்ளனர். Swisstek Ceylon PLC நிறுவனமானது தங்களது வாடிக்கையாளர்களுக்கு அவர்களது கட்டுமான மற்றும் புனரமைப்புத் தேவைகளுக்கு அத்தியாவசியமான தயாரிப்புகள் தொடர்பாக சிறந்த முடிவுகளை எடுப்பதை ஊக்குவிப்பதற்காக தன்னை அர்ப்பணித்துள்ளது.

ஆண்களுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பை உருவாக்குவதில் முடிவெடுப்பது மற்றும் வாடிக்கையாளர்களின் முதலீட்டை பாதுகாக்கவும் நீடித்த வாழ்விடங்களை அமைப்பதற்கான உயர்தர கட்டுமானப் பொருள்களான Swisstek நிறுவனத்தின் டைல் ஒட்டும் பசைகள், மெல்லிய மூடல், நீர்புகா தீர்வுகள் (adhesive, skim coat, waterproofing solutions) உள்ளிட்ட ஏனைய தயாரிப்புகளைத் தெரிவு செய்வதிலான முக்கிய அம்சங்கள் தொடர்பில் விழிப்புணர்வை அதிகரிப்பதே இந்த கூட்டணியின் நோக்கமாகும்.

Swisstek Ceylon PLC நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி தமிந்த பெரேரா இது பற்றித் தெரிவிக்கையில், “சமரி அத்தபத்து போன்ற ஒருவருடன் இணைந்து பணியாற்றுவது Swisstek Ceylon PLC நிறுவனத்திற்கு சிறந்த கௌரவமும் பாக்கியமும் ஆகும். சமரி பின்பற்றும் அதே பெறுமதி மற்றும் குணாதிசயங்களின் அடிப்படையில் Swisstek நிறுவனமும் அதன் தலைமைத்துவத்தினால் கட்டமைக்கப்பட்டுள்ளது. விசேடத்துவம், ஒருமைப்பாடு,அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்கான எமது நாட்டமானது, சமரியை பிரதிபலிக்கிறது. அத்துடன் சமரியுடன் நீண்ட கால கூட்டாண்மையொன்றை உருவாக்க நாம் எதிர்பார்க்கிறோம்.” என்றார்.

இலங்கை மகளிர் தேசிய கிரிக்கெட் அணியின் தலைவியான சமரி அத்தபத்து தெரிவிக்கையில், “தொழில்துறையின் முன்னோடியான Swisstek Ceylon PLC நிறுவனத்துடன் இணைந்து கொள்வதில் நான் உண்மையில் மட்டற்ற மகிழ்ச்சியடைகிறேன். சமத்துவம் மற்றும் புத்தாக்கம் தொடர்பான அவர்களது அர்ப்பணிப்பானது மிக முன்னிலையில் உள்ளது. இந்த கூட்டாண்மையானது, உள்ளீர்ப்பை மேம்படுத்துவதோடு, சாதகமான மாற்றத்தை உண்டாக்கும் எமது பகிரப்பட்ட தூரநோக்கத்தையும் எடுத்துக் காட்டுகிறது. Swisstek நிறுவனத்துடன் இணைந்து பணியாற்றுவதன் மூலம் விசேடத்துவத்தையும், சமத்துவ மரபையும் உருவாக்க நான் ஆவலுடன் உள்ளேன்.” என்றார்.

Swisstek Ceylon PLC நிறுவனம் சமரி அத்தபத்துவுடன் இணைந்து, நாடு முழுவதிலும் உள்ள சமூகங்களுக்கு புத்துயிரளிப்பதில் முக்கிய பங்கு வகிக்கும் கட்டுமானத்தை ஏற்படுத்தி, செழிப்பான இலங்கையை உருவாக்குவதற்கான அவர்களது ஒரே நோக்கம் கொண்ட தூரநோக்கை பகிர்ந்து கொள்கின்றனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT