கைதான சந்தேகநபர் ஒருவர் வழங்கிய தகவலுக்கமைய, இராஜகிரிய பகுதியில் சந்தேகநபர் ஒருவர் ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை (09) பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் கைது செய்யப்பட்டு, பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேகநபர் வழங்கிய தகவலுக்கமைய அவரிடமிருந்து கைத்துப்பாக்கி ஒன்று மீட்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து குறித்த நபரிடம் மேற்கொண்ட மேலதிக விசாரணைகளுக்கமைய நேற்றையதினம் (10) இராஜகிரிய பகுதியில் மேற்கொண்ட சோதனை நடவடிக்கையில், குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட சந்தேகநபர் ஒரு சிறைச்சாலை அதிகாரி என தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது பின்வரும் பொருட்கள் மீட்கப்பட்டுள்ளன:
- T56 ரக துப்பாக்கி 01
- அதற்கான மெகசின் 01
- கைத்துப்பாக்கி 01
- அதற்கான மெகசின் 01
- பல்வேறு வகை தோட்டாக்கள் 400+
- ஹெரோயின் 6g
- கஞ்சா 7g
- குஷ் 2g
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் முன்னெடுத்துள்ளனர்.