நவீன கற்பித்தல் முறையை ஊக்குவிக்கும் நோக்கில் சம்மாந்துறை வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகாவித்தியாலயத்தில் மனிதநேயம் நம்பிக்கை நிதியத்தின் அனுசரணையில் விஞ்ஞான ஒன்றியம் மட்டு- அம்பாறை அமைப்பின் ஒருங்கிணைப்பில் 1.1 மில்லியன் ரூபா பெறுமதியான திறன்வகுப்பறை (Smart panel with ops- 86 inch, lecture hall chairs-30, internet connection, curtains for the room) திறப்பு விழா கடந்த வியாழக்கிழமை அதிபர் எஸ்.தியாகராஜா தலைமையில் நடைபெற்றது.
அமரர் கலாநிதி சுதன் சுதர்சன் நினைவாக சுமதி சுதர்சன், ஷோபனா சுதர்ஷன், நீலன் சுதர்சன் நிதியுதவியில் (Rs 1,163,150) இந்திறன் வகுப்பறை மனிதநேய அறக்கட்டளை ஸ்தாபக தலைவர் கை. அரவிந்தனின் ஏற்பாட்டில் திறந்து வைக்கப்பட்டது.
அதிதிகளாக மனிதநேய அமைப்பின் இலங்கைக்கான இணைப்பாளர்களான ஆர். சிரஞ்சீவி, திருமதி சாந்தி சிரஞ்சீவி, உதவிக் கல்விப் பணிப்பாளர் வீ.ரி.சகாதேவராஜா, மற்றும் அம்பாறை விஞ்ஞான ஒன்றிய ஸ்தாபக தலைவர் தி.கோபிநாத், ஸ்தாபகர் பொறியியலாளர் வ.யதுர்சன், ஆசிரிய ஆலோசர்களான எஸ். மோகன், ஆர். சந்திரகுமார் உள்ளிட்டவர் கலந்து சிறப்பித்தனர். பாடசாலை அபிவிருத்திச் சங்க செயலாளர் கே. மதிவண்ணன் பழைய மாணவர் மன்ற தலைவர் லோஷனன் விஞ்ஞான ஒன்றிய உறுப்பினர்கள், ஆசிரியர்கள் மாணவர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். மனித நேயம் அமைப்பின் இச்சேவையை பாராட்டி பாடசாலை சமூகத்தினால் திரு. திருமதி. சிரஞ்ஜீவி தம்பதியினர் பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டதுடன் விஞ்ஞான ஒன்றியம் மட்டு அம்பாறை அமைப்பினால் நினைவுச் சின்னம் வழங்கி கௌரவிக்கப்பட்டது.
காரைதீவு குறூப் நிருபர்…?