Home » துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் எம்.எச்.எம் அஷ்ரப் நினைவுதின நிகழ்வு

துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ் ஏற்பாட்டில் எம்.எச்.எம் அஷ்ரப் நினைவுதின நிகழ்வு

by sachintha
August 10, 2024 8:20 am 0 comment

இலங்கை துறைமுக அதிகார சபையின் முஸ்லிம் மஜ்லிஸ், முஸ்லிம் காங்கிரஸின் மறைந்த தலைவர் எம்.எச்.எம். அஷ்ரப் நினைவு தின பேச்சு, முஸ்லிம் ஊழியர்களது பிள்ளைகளுக்கான புலமைப்பரிசில் மற்றும் பல்கலைக்கழகம் சென்றுள்ளவர்களுக்கு புலமைப் பரிசில் வழங்கல் ஆகியவற்றை அண்மையில் நடத்தியது.

அத்துடன் அதிகார சபையில் சேவையாற்றி ஓய்வுபெற்ற முஸ்லிம் ஊழியர்களுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.

மஜ்லிசின் தலைவர் இல்ஹாம் மசூர் மௌலானா அங்கு உரையாற்றுகையில்,

மறைந்த எம்.எச்.எம் அஷ்ரப் ஆயிரக்கணக்கான இளைஞர், யுவதிகளுக்கு இலங்கை துறைமுக அதிகார சபையில் தொழில் தந்தமையால்தான் தாங்கள் திறமையாக தொழில் செய்து கைநிறைய சம்பளம் பெற்று எங்களது வாழ்க்கை சீராக செல்கின்றது. இந்த ஊதியத்தினால்தான் எங்களது பிள்ளைகள் கொழும்பிலும் ஊரிலும் கல்வி கற்று பொறியியலாளர்கள், வைத்தியர்களாக பட்டதாரிகளாக உள்ளனர். அதற்காக அவரை நாங்கள் நினைவு கூரக் கடமைப்பட்டுள்ளோம். அன்னாரை நாம் வருடாந்தம் நினைவு கூர்ந்து அவர் பெயரினால் இவ்வாறான புலமைப்பரிசில் திட்டத்தினை கடந்த 4 வருடகாலமாக செயற்படுத்துகிறோம். அவர் ஆரம்பித்து வைத்த துறைமுக இப்தார் நிகழ்வினையும் தொடர்ச்சியாக செய்து வருகின்றோம் என தெரிவித்தார்.

மேற்படி நிகழ்வு கொழும்பில் உள்ள தபால் திணைக்களத்தின் கூட்ட மண்டபத்தில் மஜ்லிசின் தலைவர் இல்ஹாம் மௌலானா தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியை துறைமுக அதிகார சபையின் ஊழியர் ஒலிபரப்பாளர் திக்குவலை சும்ரி நெறிப்படுத்தினார்.

பிரதம பேச்சாளர்களாக ஜனாதிபதி சட்டத்தரணி எம்.எம்.சுஹைர், பேராசிரியர் எம்.எஸ்.எம் ஜலால்டீன, முன்னாள் புனா்வாழ்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.எம். நஹியா, முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான என்.எம். அமீன் ஆகியோர் பங்கேற்றனர். 300 இற்கும் மேற்பட்ட துறைமுக முஸ்லிம் ஊழியர்களும் கலந்து சிறப்பித்தனர்.

அஷ்ரப் ஏ சமத்…

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x