சின்ஜியான் மாகாணத்தின் யார்க்கண்டில் கொல்லப்பட்ட உய்குர் மக்கள் தொடர்பில் நீதியான விசாரணைகளை முன்னெடுக்குமாறு உலக உய்குர் கொங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
இவ்விசாரணைகளை வெளிப்படைத்தன்மையுடன் முன்னெடுத்து பாதிக்கப்பட்டுள்ள உய்குர் மக்களின் குடும்பங்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்குமாறும் இந்த கொங்கிரஸ் வலியுறுத்தியுள்ளது.
யார்க்கண்ட்டில் கொல்லப்பட்டவர்களின் பத்தாண்டு நிறைவையொட்டி ஜெர்மனியை தளமாகக் கொண்டுள்ள உய்குர் கொங்கிரஸின் தலைவர் டோல்குன் இசா விடுத்துள்ள அறிக்கையில், இச்சம்பவம் குறித்து வெளிப்படைத்தன்மை மிக்க விசாரணைகளை முன்னெடுத்து பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உறவினர்களுக்கு நியாயம் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.