216
ஜப்பானின் கியூஷு, ஷிகோகூ வட்டாரங்களை நேற்று 6.9 ரிக்டர் அளவிலான பூகம்பம் உலுக்கியுள்ளது. அதன் பின்னர் 7.1 ரிக்டர் அளவிலான பூகம்பம் ஏற்பட்டது. இதனை அடுத்து சுனாமி எச்சரிக்கையும் விடுக்கப்பட்டது.
இதனை அடுத்து சில பகுதிகளை 20 சென்டிமீற்றர் உயரமுள்ள அலைகள் எட்டியதாகக் கூறப்படுகிறது.
முதல் பூகம்பம்; 33 கிலோமீற்றர் ஆழத்திலும் இரண்டாவது பூகம்கம்; 25 கிலோமீற்றர் ஆழத்திலும் ஏற்பட்டன. அதிர்வுகள் ஒசாக்கா, டோக்கியோ ஆகிய இடங்களிலும் உணரப்பட்டதாகத் தகவல்கள் கூறுகின்றன.
ஜப்பான் நெருப்பு வளையம் எனும் பூகம்பங்கள் அதிகம் நிகழும் பகுதியில் அமைந்துள்ளது. அந்தப் பகுதி பசிபிக் பெருங்கடலில் உள்ளது.