Home » 2024 பாடசாலை ரக்பி தொடருக்கு பிறிமா கொத்துமீ ஆதரவு

2024 பாடசாலை ரக்பி தொடருக்கு பிறிமா கொத்துமீ ஆதரவு

by Rizwan Segu Mohideen
August 9, 2024 4:47 pm 0 comment

நாட்டின் பிரபலம் மிக்க பாடசாலை ரக்பி அணிகளை ஊக்குவிக்கும் வகையில் இலங்கையில் அனைவராலும் விரும்பப்படும் உடனடி நூடுல்ஸ் வர்த்தகநாமமான, பிரபலமான Prima KottuMee உத்தியோகபூர்வமாக இணைவதை அறிவித்துள்ளது.

கொழும்பு றோயல் கல்லூரி, புனித தோமஸ் கல்லூரி, புனித பீட்டர் கல்லூரி, திரித்துவ கல்லூரி, புனித ஜோசப் கல்லூரி, தேர்ஸ்டன் கல்லூரி, இசிபதான கல்லூரி, புனித அந்தோனியார் கல்லூரி ஆகியவற்றின் ரக்பி இரசிகர்களின் ஆர்வத்தைத் தூண்டும் வகையில், மிகவும் எதிர்பார்ப்புக்குரிய 2024 பாடசாலை ரக்பி தொடர் முழுவதும், விளையாட்டின் மீது தாம் கொண்டுள்ள ஆதரவை Prima KottuMee வெளிப்படுத்தவுள்ளது.

இந்த அணிகளுக்கு ஆதரவளிப்பதன் மூலம், இலங்கை இளைஞர்கள் கொண்டுள்ள ஆர்வத்துடனும் ஆற்றலுடனும் Prima KottuMee தன்னை இணைத்துக் கொள்வதில் பெருமை கொள்கிறது.
உற்சாகமளிக்கும் போட்டிகள், மெய்சிலிர்க்கும் தடுப்பாட்டங்கள், புள்ளிகளைப் பெறும் மறக்க முடியாத முயற்சிகளைக் காண நீங்களும் தயாராகுங்கள். Prima KottuMee உடன் இணைந்து இலங்கை பாடசாலை ரக்பிக்கு உங்கள் ஆதரவை வழங்குங்கள்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x