இந்தியாவுக்கு எதிராக 27 ஆண்டுகளின் பின்னர் முதல் முறையாக வரலாற்று வெற்றி ஒன்றை பெறுவதற்காக உதவிய முன்னாள் வீரர்களான குமார் சங்கக்கார மற்றும் லசித் மாலிங்கவுக்கு இலங்கை அணியின் இடைக்கால பயிற்சியாளர் சனத் ஜயசூரிய நன்றி தெரிவித்துள்ளார்.
‘அணியினர் மற்றும் அணியின் உதவிப் பணியாளர்களுக்கு உதவியது மற்றும் ஊக்கம் அளித்ததற்காக சங்கா மற்றும் லசித்துக்கு நான் விசேட நன்றிகளை கூறிக்கொள்கிறேன்’ என்று ஜயசூரிய எக்ஸ் சமூகதளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இந்தத் தொடர் முழுவதும் லசித் மாலிங்க சூம் தொழில்நுட்பத்தின் ஊடாக இணைந்து இலங்கை பந்துவீச்சாளர்களுக்கு வழிகாட்டி இருப்பதாக தெரியவருகிறது. அதேபோன்று சங்கக்காரவும் இலங்கை அணிக்கு முக்கிய அலோசனைகளை வழங்கியுள்ளார்.
இந்தியாவுக்கு எதிராக ஒருநாள் தொடரை இலங்கை அணி 2–0 என கைப்பற்றியது. இது 1997 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இலங்கை அணி இந்தியாவுக்கு எதிராக பெற்ற முதலாவது தொடர் வெற்றியாக இருந்தது.