சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டு அறுகம்பை அபிவிருத்தி போரம் வருடாவருடம் நடத்தி வரும் சர்வதேச தரத்திலான அரை மரதன் ஓட்டப் போட்டி இவ்வருடமும் இடம்பெறவுள்ளது.
அறுகம்பை அரை மரதன் ஓட்டப்போட்டி தொடர்பான அறிமுக நிகழ்வு அறுகம்பையில் இடம்பெற்றது. இதன்போது அறுகம்பை அபிவிருத்தி போரத்தின் தலைவரும், இயன்மருத்துவருமான இஸட்.எம்.ஹாஜித் உள்ளிட்ட போரத்தின் உயர்பீட உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டு போட்டி தொடர்பான அறிமுகத்தினை வழங்கினர்.
உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் வகையிலும், சுற்றுலாத்துறையை ஊக்குவிக்கும் பொருட்டும் இம்மரதன் ஓட்டப் போட்டியினை அறுகம்பை அபிவிருத்தி போரம் சர்வதேச தரத்தில் நடத்துகிறது.
அறுகம்பே அபிவிருத்தி போரம் 6வது தடவையாக நடாத்தும் குறித்த அரை மரதன் போட்டியானது எதிர்வரும் 18ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றவுள்ளது. இப்போட்டியில் உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் உட்பட 250 வீரர்கள் பங்கேற்கவுள்ளனர்.
குறித்த மரதன் போட்டியானது 21.1 கிலோமீற்றர், 10கிலோமீற்றர், 5கிலோமீற்றர் என 3பிரிவுகளாக நடைபெறவுள்ளது. 5கிலோமீற்றர் போட்டியானது முதியவர்களுக்கு தனியாகவும் சிறுவர்களுக்கு தனியாகவும் இடம்பெறவுள்ளது.
ஆதம் லெப்பை றியாஸ்
பாலமுனை விசேட நிருபர்