Wednesday, September 11, 2024
Home » உலகெங்கும் சாதனைப் பயணத்தில் உச்சம் தொடும் மாற்றுத்திறனாளிகள்

உலகெங்கும் சாதனைப் பயணத்தில் உச்சம் தொடும் மாற்றுத்திறனாளிகள்

by mahesh
August 9, 2024 11:00 am 0 comment

மாற்றுத் திறனாளிகள் சமூகத்திலிருந்து ஓரங்கட்டப்படாதுமனிதாபிமானத்துடன் அணுகப்பட வேண்டும். அவர்களின் உரிமைகள் மதிக்கப்படுவதும் அவசியம். சமூகத்தில் பல்வேறுபட்ட மனிதர்கள் வாழ்கின்றனர். இவர்களுள் விசேட தேவையுடைய மாற்றுத்திறனாளிகள், சமூகத்தின் அனைத்து செயற்பாடுகளினதும் முக்கிய பங்காளர்களாவர்.

உடல் ஊனமுறுதல் என்பது ஆரம்ப காலம் முதல் இன்றுவரை தவிர்க்க முடியாத ஒன்றாகவே இருந்து வருகின்றது. பண்டைய காலத்தில் உடல் ஊனமுற்றவர்கள் நாட்டுக்கு நாடு பல்வேறு விதமாக நோக்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தார்கள். எனினும் அக்காலத்தில் ஒட்டுமொத்தமாக இவர்களின் நிலை மிகவும் பரிதாபத்துக்கு உரியதொன்றாகக் காணப்பட்டது.

ஏனைய மனிதர்களை விட மாற்றுத்திறனாளிகள் உடல், உள ரீதியான விதத்தில் வேறுபட்டுக் காணப்படுவதனால் அவர்களை எவ்வித தடைகளுமின்றி சமூக செயற்பாட்டில் முழுமையாக பங்கு கொள்ள வைப்பது மிக முக்கியம்.

தங்களுக்கான உரிய வாய்ப்புக்கள் வழங்குகின்ற பட்சத்தில் தாமும் சளைத்தவர்கள் அல்ல என்பதை மாற்றுத்திறனாளிகள் ஒவ்வொரு விடயத்திலும் நிரூபித்துக் கொண்டிருக்கின்றனர். அதாவது இன்று இலங்கை மற்றும் சர்வதேச ரீதியில் தொழில், கல்வி, வானியல், அறிவியல், இலக்கியம், தொழில்நுட்பம் போன்ற பல்வேறு துறைகளிலும் கொடிகட்டிப் பறக்கும் சாதனையாளர்களாக மாற்றுத்திறனாளிகளும் உலா வந்து கொண்டிருக்கின்றனர். இவ்வாறு இவர்களது சாதனைகளை உற்சாகப்படுத்தி ஊக்கப்படுத்துவதன் மூலம் சமூகத்தில் அவர்களின் அந்தஸ்தை உயர்வடையச் செய்யலாம்.

மாற்றுத்திறனாளிகள் பல்வேறு துறைகளிலும் மிகுந்த பங்களிப்புகளைச் செய்து வருகின்றனர். உதாரணமாக தொழில்நுட்பத் துறையில் ஸ்டீபன் ஹாக்கிங் என்ற அறிவியலாளர், தன்னுடைய சிக்கலான உடல் நிலையிலும், உண்மை பொருளியல் பற்றிய புதிய கோட்பாடுகளை முன்மொழிந்து உலகத்திற்கு பெரும் பங்களிப்பைச் செய்துள்ளார். உலகப்புகழ் பெற்ற இயற்பியலாளர் மற்றும் வானியல் துறை விஞ்ஞானியான இவர், தன்னுடைய நோய் காரணமாக உடல் முழுமையாக செயலிழந்தபோதும், தன்னுடைய தூரநோக்கான ஆராய்ச்சிகளால் உலக விஞ்ஞானத்தில் புதிய யுகத்தை உருவாக்கினார்.

திடீர் வாகன விபத்தில் கால்களை இழந்த ​ேஜான் என்பவர், தன்னுடைய மாற்றுத்திறனை வென்று, நவீன தொழில்நுட்பத்தின் உதவியால் உலகளாவிய ரீதியில் புகழ் பெற்ற ஓவியராக மாறினார். இவ்வாறான மக்கள், மாற்றுத்திறனாளிகளாக இருந்தும்எதிர்கால சந்ததியினருக்கு வழிகாட்டுகின்றனர்.

பார்வை மற்றும் செவிவழி மாற்றுத்திறனாளியாக பிறந்த ஹெலன், தன்னுடைய முயற்சியால் உலகப் புகழ்பெற்ற எழுத்தாளராக மாறினார்.

Nick Vujicic பிறக்கும் போதே கை கால் இன்றி பிறந்தாலும், தொழில்துறையில் ஜாம்பவானாகவும் உலகளாவிய அளவில் பேச்சாளராக, ஊக்கமளிக்கும் பயிற்சியாளராக பெயர்பெற்றார்.

பரா ஒலிம்பிக் விளையாட்டு என்பது மாற்றுத்திறனாளிகளுக்கான சர்வதேச விளையாட்டு போட்டிகளாகும். இங்கு பங்கேற்கும் வீரர்கள் தங்களின் மெய்வல்லுனர் திறமைகளை வெளிப்படுத்துகிறார்கள்.அந்த வகையில் Marlon Shirley என்பவர் பரா ஒலிம்பிக் ஓட்டத்தில் உலக சாதனைகளை நிகழ்த்தி வருவதுடன், தன்னுடைய முயற்சியால் பலவிதமான பதக்கங்களையும் வென்றுள்ளார். இதேபோன்று இலங்கையில் சரித்திரம் படைத்த சாதனையாளர்கள் இலைமறை காயாகக் உள்ளனர். இலங்கையில் பல மாற்றுத்திறனாளிகள் தங்கள் துறைகளில் சாதனைகளை நிகழ்த்தி, மற்றவர்களுக்கு ஊக்கமாக உள்ளனர். அவர்கள் எதிர்கொண்ட சவால்களை தாண்டி, தங்களின் முயற்சியால் உயர்ந்த இடத்தை அடைந்துள்ளனர்.

அவர்களின் கதைகள் நமக்கு மட்டுமல்ல, உலகத்திற்கும் மகத்தான நம்பிக்கையை அளிக்கின்றன.

இவ்வாறான மாற்றுத்திறனாளிகளை எம் வாழ்வில் முன்னுதாரணமாகவும் வழிகாட்டியாகவும் பின்பற்றி நடப்பது அவசியம். கல்வி, தொழில்நுட்பம், அரசியல், வானியல், புவியியல், இலக்கியம், விளையாட்டு போன்ற பல் துறைகளிலும் அவர்களை ஊக்கப்படுத்தி, உற்சாகப்படுத்திஅவர்களையும் எம்மில் ஒருவராய் மதிக்க வேண்டும். அவர்களை சிறந்த மனித வளங்களாக சமூகத்தில் மிளிரச் செய்திடல் வேண்டும்.

மொஹமட் அப்சல் அம்னா மரியம் 
4 ஆம் வருட கல்வியியல் சிறப்புகற்கை மாணவி 
கல்வி மற்றும் பிள்ளை நலத்துறை, 
கிழக்குப் பல்கலைக்கழகம்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x