Home » பொறுப்பை சரிவர நிறைவேற்றிவிட்டு அச்சமின்றி வெளியே செல்கிறோம்

பொறுப்பை சரிவர நிறைவேற்றிவிட்டு அச்சமின்றி வெளியே செல்கிறோம்

- இரண்டு வருட கடின சேவை நமது வரலாற்றில் எழுதப்படும்

by Rizwan Segu Mohideen
August 9, 2024 7:27 pm 0 comment

அன்று நாம் ஏற்றுக்கொண்ட பொறுப்பை இன்று சரிவர நிறைவேற்றிவிட்டு அச்சமின்றி வெளியே செல்கிறோம் என, மனுஷ நாணயக்கார தெரிவித்தார்.

கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டமை சரி என, உயர் நீதிமன்றம் அறிவித்ததைத் தொடர்ந்து ஐ.ம.ச. எம்.பிக்களான ஹரின் பெனாண்டோ மற்றும் மனுஷ நாணயக்கார ஆகியோர் பத்தரமுல்லை வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இன்று (09) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போது கருத்து தெரிவிக்கும் போதே முன்னாள் அமைச்சர் மனுஷ நாணயக்கார இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

அச்சமின்றி, தூரநோக்குடன் சவால்களைப் பொறுப்பேற்றுக்கொண்ட ஜனாதிபதி ரணிலின் அரசுடன் நாம் மக்களின் உயிரைக் காப்பாற்ற இணைந்து கொண்டோம்.

நாடு வீழ்ந்த இடத்தில் இருந்து இரண்டு வருடங்களில் எங்களால் நாட்டை கட்டியெழுப்ப முடிந்துள்ளது. ஹரின் சுற்றுலாத்துறை மூலம் நாட்டுக்கு டொலர்களை கொண்டுவந்தார். என்னால் வெளிநாடுகளிலிருந்து புலம்பெயர்ந்த தொழிலார்கள் மூலம் 12 பில்லியன் அமெரிக்க டொலர்களை கொண்டு வர முடிந்தது.

இதனால் தான் மக்களுக்கு எரிபொருள், எரிவாயு, மருந்து மற்றும் மின்சாரத்தை தொடர்ச்சியாக வழங்க முடிந்தது. இதன் காரணமாகவே நாட்டின் தொழில்துறைகளை கட்டியெழுப்பி பொருளாதாரத்தை வலுப்படுத்த முடிந்தது.

அன்று நாம் ஏற்றுக்கொண்ட பொறுப்பை இன்று சரிவர நிறைவேற்றிவிட்டு அச்சமின்றி வெளியே செல்கிறோம். எமது இரண்டு வருட கடின சேவை நமது வரலாற்றில் எழுதப்படும். எனக்கு வாக்களித்த ஐக்கிய மக்கள் சக்தி கட்சியின் வாக்காளர்களுக்கு நான்றிகளைத் தெரிவித்து கொள்வதாக முன்னாள் அமைச்சர் மேலும் கூறினார்.

அமைச்சிலிருந்து விடை பெற்றார் ஹரின் பெனாண்டோ

மனுஷ, ஹரின் ஐ.ம.ச. கட்சி உறுப்புரிமை நீக்கப்பட்டமை சரியே

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT