Wednesday, September 11, 2024
Home » நேற்று முதல் அமுலான சட்டமூலம்; சபாநாயகர் அறிவிப்பு

நேற்று முதல் அமுலான சட்டமூலம்; சபாநாயகர் அறிவிப்பு

- இன்று பாராளுமன்றத்திற்கு தெரிவிப்பு

by Prashahini
August 9, 2024 3:15 pm 0 comment

இலங்கைச் சனநாயக சோசலிசக் குடியரசின் அரசியலமைப்பின் 79 ஆம் இலக்க உறுப்புரையின் பிரகாரம், 2024 ஓகஸ்ட் மாதம் 08 ஆம் திகதி “பகிரங்க நிதிசார் முகாமைத்துவம்” எனும் சட்டமூலத்தில் கையொப்பமிட்டு சான்றுரைப்படுத்தியிருப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று (09) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

பகிரங்க நிதிசார் முகாமைத்துவ சட்டமூலம் 2024 மே 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதுடன், கடந்த ஜூலை மாதம் 25ஆம் திகதி வாக்கெடுப்பு இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டிருந்தது.

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x