661
ஐக்கிய மக்கள் சக்தியின் கம்பஹா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய மக்கள் சக்தியின் தவிசாளர் பதவியை இன்று (09) இராஜினாமா செய்துள்ளார்.
பொன்சேகாவினால் அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதம் கிடைத்துள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.
பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா 2024ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களமிறங்கியுள்ளார்.
தேர்தலுக்கான கட்டுப்பணத்தை அவர் கடந்த 5ஆம் திகதி செலுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.