Wednesday, September 11, 2024
Home » இலங்கை – இந்திய நட்புறவு வளைவு அங்குரார்ப்பணம்

இலங்கை – இந்திய நட்புறவு வளைவு அங்குரார்ப்பணம்

by Rizwan Segu Mohideen
August 9, 2024 8:03 am 0 comment

நேற்று (08) கோட்டே ஶ்ரீ ஜயவர்தனபுர தேசிய சந்தன மர பூங்காவில் இலங்கை – இந்திய நட்புறவு வளைவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சின் ஆதரவுடன் இந்திய உயர் ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவு சங்கம் ஆகியவை ஒன்றிணைந்து இவ்வளைவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்த சபாநாயகர் மஹிந்த யாபா அபேவர்தன இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவுடன் இணைந்து இலங்கை இந்திய நட்புறவு வளைவை திறந்துவைத்ததைத் தொடர்ந்து இந்நிகழ்வுகள் ஆரம்பமாகியிருந்தன.

அமைச்சர் பிரசன்ன ரணதுங்க, இலங்கை இந்திய பாராளுமன்ற நட்புறவுச் சங்கத்தின் பதவிதாரிகளான பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.ஏ. சுமந்திரன், கலாநிதி வே. இராதாகிருஸ்ணன், ஜகத் குமார சுமித்ராரச்சி மற்றும் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டு இத்தேசிய சந்தன மர பூங்காவில் மருத மரக் கன்றுகளை வளைவு வடிவிலான ஒழுங்கில் நட்டுவைத்தனர்.

சுற்றுச்சூழலுக்கான உறுதியான அர்ப்பணிப்பை வலியுறுத்தும் வகையில் 2024 உலக சுற்றாடல் தினத்தன்று பிரதமர் ஶ்ரீ நரேந்திர மோடியினால் ஆரம்பிக்கப்பட்ட #Plant4Mother திட்டத்தின் அங்கமாக இந்த திட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது.

இதனை முன்னிட்டு புது டில்லியில் உள்ள புத்த ஜயந்தி பூங்காவில் 2024 ஜூன் 05 ஆம் திகதி அரச மரக்கன்று ஒன்றை நட்டு வைத்து பிரதமர் நரேந்திர மோடி இத்திட்டத்தினை ஆரம்பித்து வைத்திருந்தார்.

இத்திட்டத்தில் இந்தியாவில் உள்ள அனைவரும், அதேநேரம் வெளிநாடுகளில் உள்ளவர்களும் இணையவேண்டுமெனவும் அவர் அழைப்பு விடுத்திருந்தார்.

முழுமையான அரசாங்கம் மற்றும் முழுமையனா சமூகம், அணுகுமுறையைப் பின்பற்றி இந்தியாவில் 2024 செப்டெம்பர் மாதத்திற்குள் 800 மில்லியன் மரங்களை நடுவதற்கும் 2025 மார்ச்சிற்குள் 1.4 பில்லியன் மரங்களை நடவும் திட்டமிடப்பட்டுள்ளது.

தற்போது இலங்கை இந்திய நட்புறவு வளைவினை அங்குரார்ப்பணம் செய்து வைத்துள்ளமையானது இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்ட கால நிலையான நட்புறவிற்கான ஒரு சான்றாக அமைகின்றது.

ஸ்திரமான பொருளாதார அபிவிருத்தி மற்றும் பரஸ்பரம் நன்மைதரக் கூடிய இருதரப்பு பங்குடைமையினை மேம்படுத்துதல் மற்றும் ஆழமாக்குதல் ஆகியவற்றுக்கான பொதுவான இலக்கினையும் இது சுட்டிக்காட்டுவதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x