மருத்துவம் (திருத்தச்) சட்டமூலங்கள் இரண்டு இன்றையதினம் (08) பாராளுமன்றத்தில் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
இன்று மு.ப 10.30 மணி முதல் இச்சட்டமூலங்கள் குறித்த இரண்டாவது மதிப்பீடு விவாதம் நடைபெற்றதுடன், இதன்போது குறித்த சட்டமூலங்களின் முக்கியத்துவம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் கருத்துக்களை முன்வைத்தனர்.
விவாதம் முடிவடைந்ததும் குழு நிலையில் குறித்த சட்டமூலங்களுக்கான திருத்தங்கள் முன்வைக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து இரு சட்டமூலங்களும் விவாதம் இன்றி திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டன.
மருத்துவக் கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான இரு மருத்துவம் (திருத்தச்) சட்டமூலங்களும் சுகாதார அமைச்சரினால் கடந்த ஜூலை 02ஆம் திகதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன.