Wednesday, September 11, 2024
Home » ஞாயிற்றுக்கிழமை ஒரு சில இடங்களில் 12 மணி நேர நீர் வெட்டு

ஞாயிற்றுக்கிழமை ஒரு சில இடங்களில் 12 மணி நேர நீர் வெட்டு

- மு.ப. 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை அமுல்

by Rizwan Segu Mohideen
August 8, 2024 5:26 pm 0 comment

எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (11) களனி, வத்தளை, பியகம ஆகிய பகுதிகளுக்கு 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது.

அதற்கமைய, பேலியகொடை நகர சபைக்குட்பட்ட பகுதிகள், ஜா எல, கட்டுநாயக்க, சீதுவை பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகள், பியகம, மஹர, தொம்பே, ஜா எல, கட்டான, மினுவாங்கொடை , கம்பஹா பிரதேச செயலகப் பிரிவுகளுக்குட்பட்ட பகுதிகளுக்கு இவ்வாறு நீர் விநியோகத்தடை அமுல்படுத்தப்படவுள்ளதாக சபை தெரிவித்துள்ளது.

ஞாயிற்றுக்கிழமை (11) மு.ப. 9.00 மணி முதல் இரவு 9.00 மணி வரை நீர் வெட்டு அமுலில் இருக்குமென சபை குறிப்பிட்டுள்ளது.

இது தொடர்பில் பொதுமக்களுக்கு ஏற்படும் அசௌகரியங்களுக்கு வருந்துவதாக தெரிவித்துள்ள சபை, நீரை சேமித்து வைத்துப் பயன்படுத்துவதன் மூலம் உரிய காலப் பகுதியில் ஏற்படும் அசௌகரியங்களை தவிர்ந்து கொள்ளுமாறு சபை குறிப்பிட்டுள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x