469
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் ஆகிய அமைச்சுப் பொறுப்புகளை நேரடியாக ஜனாதிபதியின் கீழ் மாற்றும் அதிவிசேட வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
கலாநிதி விஜயதாச ராஜபக்ஷ தனது அமைச்சுப் பதவியிலிருந்து இராஜினாமா செய்ததைத் தொடர்ந்து இந்த மறுசீரமைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
விஜயதாச ராஜபக்ஷ எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்கு தயாராகும் வகையில் தனது பதவியில் இருந்து விலகியுள்ளார்.
நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தங்களுக்கான அமைச்சுப் பிரிவை நேரடியாக ஜனாதிபதியின் கீழ் மாற்றுவதற்கான வர்த்தமானியில் ஜனாதிபதியின் செயலாளரினால் கையொப்பமிடப்பட்டது.
gazzete-n07