158
யாழ்ப்பாண மாவட்ட உணவு திருவிழாவும் விற்பனை கண்காட்சியும் யாழ்ப்பாணத்தின் முற்றவெளி மைதானத்தில் நேற்று முன்தினம் திங்கட்கிழமை ஆரம்பமானது.
இந்த உணவு திருவிழா மற்றும் விற்பனை கண்காட்சியின் மூலம் இத் துறையில் ஈடுப்பட்டுள்ள முயற்சியாளர்கள் ஊக்குவிக்கப்படுகின்றனர். அத்துடன் தரமான உள்ளூர் உற்பத்திகளையும் இதன் மூலம் பெற்றுக்கொள்ள முடியும். அதேவேளை மாலை வேளைகளில் பாரம்பரிய கலை நிகழ்வுகளும் இடம்பெறுகின்றன.
இந்தக் கண்காட்சியானது இன்று புதன்கிழமைவரை நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.
யாழ். விசேட நிருபர்