மலையக கலை கலாசார சங்கமான இரத்தினதீபம் அமைப்பானது, கண்டி செல்லத்துரை நினைவு மண்டபத்தில் அண்மையில் விருது விழாவொன்றை நடத்தியிருந்தது.
இந்த விருது விழாவில் பல்வேறு கலைஞர்கள் கௌரவிக்கப்பட்டிருந்ததுடன், மறைந்த நடிகர் விஜயகுமாரனதுங்க மற்றும் மொஹிடீன் பேக் ஆகியோர்களது நினைவேந்தல் வைபவமும் இடம் பெற்றது.
இந் நிகழ்வில், பிரதம அதிதியாக பேராதனைப் பல்கலைக்கழகத்தின் தமிழ் துறைத் தலைவர் பேரசிரியர் துரை மனோகரன் கலந்துகொண்டிருந்தார்.
விசேட அதிதிகளாக சிங்கள சினிமா படத் தயாரிப்பாளர் பத்மசிரி கொடிகார, சட்டத்தரணி கலாநிதி ஏ.எம். வைஸ், வர்த்தகர் பஸன் சந்திரசேகர மற்றும் இரத்தின தீபம் அமைப்பின் தலைவர் தேசமான்ய எஸ். பரமேஸ்வரன் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதன்போது சமூக சேவையாளர்கள் மற்றும் கலைஞர்கள் பலர் கௌரவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.