Home » 150ஆவது நான்காம் நிலை மர பதக்க உயர்தர பாடநெறி நாளை நிறைவு

150ஆவது நான்காம் நிலை மர பதக்க உயர்தர பாடநெறி நாளை நிறைவு

by mahesh
August 7, 2024 1:40 pm 0 comment

150ஆவது நான்காம் நிலை மர பதக்க உயர்தர பாடநெறி கடந்த 02 ஆம் திகதி முதல் நாளை 08ஆம் திகதி வரை நுவரெலியா பீட்ரு சாரணர் முகாமில் நடைபெறவுள்ளது.

இலங்கை சாரணர் சங்கத்தின் பிரதம சாரணர் ஆணையாளர் சட்டத்தரணி ஜனபிரித் பெர்னாண்டோவின் வழிகாட்டலின் கீழ், தேசிய பயிற்சி ஆணையாளர் கர்னல் பத்மலால் பெரேராவின் வழிகாட்டலின் கீழ் நாடளாவிய ரீதியில் அனைத்து மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் திறன் குறைந்த 47 ஆசிரியர்களுக்கான பயிற்சிக்காக இந்தப் பாடநெறி நடைபெறவுள்ளது.

இலங்கையில் முதல் முறையாக மர பதக்கத்தை வென்றவர் டி.கே.இர்வின் அருட்தந்தையும் மற்றும் ஏ.விஜேசிங்வும் ஆவார்கள். அதன் பின்னர் நுவரெலியாவிலுள்ள பீட்ரு சாரணர் முகாமிலும் மீரிகமவில் உள்ள லீ தசநாயக்க சாரணர் முகாமிலும் மரப்பதக்கப் பாடநெறிகள் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்றன.

அதன்படி, 100 ஆவது சாரணர் மர பதக்க பயிற்சி நெறி நுவரெலியா பீட்ரு முகாமில் நடைபெற்றதோடு மேலும் 150 ஆவது மர பதக்க உயர் பாடநெறி கடந்த 02 ஆம் திகதி ஆரம்பமானதுடன் நாளை 08 ஆம் திகதி வரை அதே முகாமில் நடைபெறும்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x