Home » பொதுவேட்பாளர் அறிவிப்பு இழுபறி நிலையால் தாமதம்
தமிழரசு கட்சிக்குள் இரு நிலைப்பாடு

பொதுவேட்பாளர் அறிவிப்பு இழுபறி நிலையால் தாமதம்

by mahesh
August 7, 2024 1:30 pm 0 comment

ஜனாதிபதி தேர்தலில் தமிழர் தரப்பு பொது வேட்பாளரை அறிவிப்பதற்கு தமிழரசு கட்சியின் சம்மதம் கிடைக்காததால், பொது வேட்பாளரை அறிவிப்பது பிற்போடப்பட்டுள்ளதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தமிழர் தரப்பு பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவது தொடர்பாக தமிழ் கட்சிகளுக்கும் சிவில் அமைப்புகளுக்குமிடையிலான நீண்ட கலந்துரையாடல் சில மாதங்களாக நடைபெற்று வந்தது.

கடந்த மாதம் ஏழு தமிழ் கட்சிகளும் ஆறு சிவில் அமைப்புகளும் இணைந்து தமிழ் பொதுக் கட்டமைப்பு ஒன்றை உருவாக்கி, பொது வேட்பாளர் தொடர்பான தெரிவை முன்னெடுப்பதற்கான உப குழுக்கள் அமைக்கப்பட்டன. இந்நிலையில், தமிழ் பொது வேட்பாளராக தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா மற்றும் கிழக்கு மாகாண தமிழரசுக் கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அரியநேத்திரன் ஆகியோரின் பெயர்கள் இறுதி முடிவுக்காக பரிசீலனையில் எடுக்கப்பட்டிருந்தது.

இருவரும் தமிழரசு கட்சியை சேர்ந்தவர்கள் என்பதால், தமிழரசு கட்சிக்குள் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் சார்பு அணி பொது வேட்பாளருக்கு ஆதரவாகவும் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் ஆதரவு அணி பொது வேட்பாளருக்கு எதிராகவும் உள்ளன.

இதனால் தமிழரசுக் கட்சியின் சம்மதம் கிடைக்காமல் உள்ளது. இந்நிலையில் தமிழரசுக் கட்சியின் ஆதரவு இல்லாமல் இருவருடைய பெயர்களில் ஒருவரை தெரிவு செய்வதில் சிக்கல் காணப்படுவதாலேயே, பொது வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x