குருநாகல் மாவட்ட புத்திஜீவிகளுடனான சந்திப்பு திங்கட் கிழமை (05) சியம்பலாகஸ்கொடுவயில் கட்சியின் குருநாகல் மாவட்ட அமைப்பாளரும் ஓய்வுபெற்ற அதிபருமான முஸம்மிலின் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், கட்சியின் தவிசாளரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான அமீர் அலி, கட்சியின் உயர்பீட உறுப்பினர்களான இர்பான், அஷார்டீன், அன்பாஸ், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் அஷாட், இணைப்பாளர் டில்ஷாட் அலவி, முன்னாள் அமைச்சின் மேலதிக செயலாளர் ரியால்டீன், குருநாகல் மாவட்ட உலமா சபைத் தலைவர் சுஐப் மெளலவி உள்ளிட்டோருடன் கல்வியியலாளர்கள் மற்றும் இளைஞர்கள் உட்பட பலரும் கலந்துகொண்ட இந்நிகழ்வில் கட்சித் தலைவர் ரிஷாட் பதியுதீன் விசேட உரையொன்றையும் நிகழ்த்தினார்.