மக்கள் வங்கியின் கல்கிரியாகம கிளை அண்மையில் புதிய முகவரிக்கு இடம்மாறியுள்ளது.
தாராளமான இடவசதி கொண்ட இப்புதிய கிளை, அதிநவீன டிஜிட்டல் வங்கிச்சேவை தொழில்நுட்பத்தின் பக்கபலத்துடன், முழுமையான சேவைகளை வழங்கி, வாடிக்கையாளர்களுக்கு கூடுதல் சௌகரியத்தையும் அளிக்கின்றது.
மக்கள் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அதிகாரிகள், அனுராதபுரம் பிராந்திய முகாமையாளர் அசித தனவலவிதான, உதவிப் பிராந்திய முகாமையாளர்களான ஐ.எஸ். கிரிந்தேகெதர, சுதீர ஜெயசிங்க, எஸ்.பி.கே. எக்கநாயக்க, சிரேஷ்ட சட்ட அலுவலர் எஸ்.எம்.டி குமாரி, கிளை முகாமையாளர் நெவில் திசாநாயக்க, வாடிக்கையாளர்கள் என பலரும் இந்நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
1961 ஆம் ஆண்டில் ஸ்தாபிக்கப்பட்ட மக்கள் வங்கி, 15.2 மில்லியனுக்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்கள் என்ற அதிகூடிய வாடிக்கையாளர் தளத்துடன், இலங்கையின் முன்னணி வர்த்தக வங்கிகளுள் ஒன்றாகத் திகழ்ந்து வருகின்றது. 749 கிளைகளுடன் நாட்டில் மிகப் பெரிய வலையமைப்பினை அது கொண்டுள்ளது.