இலங்கை தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2024 இல், பயன்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரிவில் இரண்டாமிடத்தை SLT-MOBITEL சுவீகரித்திருந்தது.
அண்மையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் நடைபெற்ற இந்நிகழ்வில் இலங்கையின் டிஜிட்டல் முன்னேற்றத்தில் SLT-MOBITEL வகிக்கும் முக்கிய பங்கை உணர்த்துவதாக பயன்பாடுகள் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்தி பிரிவில் பெற்றுக் கொண்ட விருது மேலும் உணர்த்தியுள்ளது.
தேசத்தின் டிஜிட்டல் உட்கட்டமைப்பை விரிவாக்கம் செய்வதில் நிறுவனம் முக்கிய பங்காற்றுவதுடன், நாட்டின் முன்னேற்றத்துக்கு ஆதரவளிப்பதுடன், நகர மற்றும் கிராமிய மட்டங்களைச் சேர்ந்த சமூகத்தாரை இணைப்பதாகவும் அமைந்துள்ளது.
இலங்கையில் தொலைத்தொடர்பாடல்கள் மற்றும் டிஜிட்டல் சேவைகள் போன்றவற்றில் புத்தாக்கத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு SLT-MOBITEL ஆதரவளிப்பதுடன், மேம்படுத்தப்பட்ட தகவல் தொடர்பாடல் தொழில்நுட்ப தீர்வுகளினூடாக இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு ஆதரவளிக்கின்றது. மேலும், தேசிய அபிவிருத்திக்கான அதன் முழுமையான வழிமுறை போன்றவற்றுக்கான, நிலைபேறான மற்றும் பொறுப்பு வாய்ந்த வியாபார செயற்பாடுகளுக்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பு உறுதி செய்துள்ளதுடன், இலங்கையின் டிஜிட்டல் எதிர்காலத்தை வடிவமைக்கும் பிரதான செயற்பாட்டாளராகவும் அமைந்துள்ளது. இந்த போட்டிகரமான சூழலில் SLT-MOBITEL இன் சாதனை என்பதும், அணியின் கடின உழைப்பு மற்றும் புத்தாக்கம் போன்றவற்றுக்கான எடுத்துக்காட்டாக அமைந்துள்ளது.