சமீபத்தில் நடைபெற்ற 4A’s நிறுவனத்தின் விளம்பரப்படுத்தல் விருதுகள் நிகழ்வில் AIA இன்சூரன்ஸ் தனது ஆக்கபூர்வமான மற்றும் கவர்ச்சிகரமான பிரச்சாரத் திட்டங்களுக்காக குறிப்பிடத்தக்க ஐந்து விருதுகளை வெற்றி பெற்றுப் பிரகாசித்திருந்தது.
AIA இன் ‘சுவ வலங்’ இதன்போது இரண்டு தங்க விருதுகள் உட்பட மூன்று விருதுகளை வெற்றி பெற்று ஒரு சிறந்த பிரச்சாரத் திட்டமாகவும் அங்கீகரிக்கப்பட்டிருந்தது. AIA ஸ்ரீலங்கா இலங்கைப் புற்றுநோய்ச் சங்கம் மற்றும் ஆக்கபூர்வமான விளம்பர நிறுவனமான லூப்ஸ் இன்டகிரேடட் நிறுவனங்களுடன் இணைந்து மேற்கொண்டிருந்த இப்பிரச்சாரத் திட்டமானது மார்பகப் புற்றுநோய் பற்றிய விழிப்புணர்வு, அது தொடர்பாக கல்வி வழங்கல் மற்றும் சுய பரிசோதனையின் முக்கியத்துவம் ஆகியவற்றை ஊக்குவிப்பதற்கான மக்களின் உள்ளார்ந்த அறிவாற்றலைத் தட்டியெழுப்பிய ஒரு தனித்துவமான பிரச்சாரத் திட்டமாகவே அமைந்திருந்தது.
இப்பிரச்சாரத் திட்டமானது இலங்கைப் பெண்கள் களிமண் பானையில் (வலங்) ஏற்படும் மாற்றங்களைக் கொண்டு தங்களது உடலில் ஏற்படும் அசாதாரணமான மாற்றங்களை அடையாளம் காணக்கூடியவாறு கலாசார நடவடிக்கையினைப் பயன்படுத்துவதன் மூலமாக இது தொடர்பான விழிப்புணர்வு மற்றும் கல்வியினை வழங்குவதற்கு உடலியல் மற்றும் டிஜிட்டல் ரீதியான நடவடிக்கைகளை ஒருங்கிணைத்திருந்ததுடன், கலாசார ரீதியில் உணர்திறன் மிக்க முறையில் சுய பரிசோதனையின் முக்கியத்துவத்தினையும் மிகவும் வினைத்திறனாக வெளிப்படுத்தியுமிருந்தது.