இலங்கையின் கொமர்ஷல் வங்கியானது அவர்களின் நிதி நடவடிக்கைகளுடன் தொடர்புடைய பசுமை இல்ல வாயு (GHG) வெளியேற்றத்தை அளவிடுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் உதவும் உலகளாவிய முயற்சியான காபன் கணக்கியல் நிதியியலுக்கான பங்குடைமை அமைப்புடன் [Partnership for Carbon Accounting Financials – (PCAF)] கையெழுத்திட்ட இலங்கையின் முதலாவது வங்கியாக மாறியுள்ளது.
ஏற்கனவே அதன் செயல்பாடுகளின் அடிப்படையில் 100% காபன் நடுநிலை சான்றளிக்கப்பட்டுள்ளது, PCAF உடனான கொமர்ஷல் வங்கியின் சிறந்த ஈடுபாடானது சர்வதேச நிதியியல் கூட்டுத்தாபனத்தால் (IFC) ஆதரிக்கப்படுவதுடன் மற்றும் இது வங்கியின் காலநிலை மாற்றத் திட்டத்தின் முக்கிய அங்கமாகும் என்று வங்கி தெரிவித்துள்ளது.
PCAF ஆனது நிதியியல் துறைகளின் காபன் தடயத்தை அளவிடுவதற்கும் வெளிப்படுத்துவதற்கும் பொதுவான வழிமுறையை வழங்குகிறது. இந்த முறையானது உலகளாவிய GHG கணக்கியல் மற்றும் அறிக்கையிடல் தரநிலையால் குறிப்பிடப்பட்டுள்ள நிதிசார்ந்த உமிழ்வுகள், எளிதாக்கப்பட்ட உமிழ்வுகள் மற்றும் காப்புறுதி தொடர்புடைய உமிழ்வுகள் ஆகியவை சார்பாக பல்வேறு நிதி நிறுவனங்களில் நிலையான அறிக்கையிடலை செயல்படுத்துகிறது.
‘கொமர்ஷல் வங்கியில், உலகளாவிய சிறந்த நடைமுறைகள் எங்கள் செயல்களுக்கு ஊக்கமளிக்கின்றன, குறிப்பாக எங்கள் நிலைபேண்தகைமையுடன் இணைக்கப்பட்ட முயற்சிகளுக்கு உந்துதலாக உள்ளன’ என்று வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளர்/பிரதம நிறைவேற்று அதிகாரி சனத் மனதுங்க தெரிவித்தார்.