Home » சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் கைது

- 227 மதுபான போத்தல்கள், உபகரணங்கள் மீட்பு

by Prashahini
August 7, 2024 4:13 pm 0 comment

யாழ்ப்பாணம் – கொழும்புத்துறை பகுதியில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்ட ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றதடுப்பு பிரிவு பொலிஸாரால் கோப்பாய் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளைஞன் கைது செய்யப்பட்டார்.

இதன்போது 227 போத்தல் கோடாவும், மதுபானம் காய்ச்சும் உபகரணங்களும் கைப்பற்றப்பட்டது.

குறித்த சந்தேகநபர் கொழும்புத்துறையிலும், வட்டுக்கோட்டையிலும் வீடுகளை வாடகைக்கு எடுத்து பல இடங்களில் சட்டவிரோத மதுபான விற்பனையில் ஈடுபட்டாரென பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x