273
ஜனாதிபதி தேர்தலில் சஜித் பிரேமதாசவுக்கு ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர அணி ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளது.
அதற்கமைய இன்று (07) காலை பத்தரமுல்லையில் அமைந்துள்ள வாட்டர் வோட்டர்ஸ் எட்ஜ் ஹோட்டலில் இரு தரப்புக்குமிடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
சுதந்திர கட்சியின் சார்பில் அதன் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகரவும் ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் அதன் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டாரவும் இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.