Home » அயர்லாந்து நோக்கி புறப்பட்டது இலங்கை மகளிர் அணி

அயர்லாந்து நோக்கி புறப்பட்டது இலங்கை மகளிர் அணி

by Prashahini
August 7, 2024 9:41 am 0 comment

இலங்கையில் நடைபெற்று முடிந்த மகளிர் T20 ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரில் சமரி அத்தபத்து தலைமையிலான இலங்கை மகளிர் அணி இறுதிப்போட்டியில் இந்திய மகளிர் அணியை வீழ்த்தி வெற்றிபெற்றதுடன், முதல் முறையாக ஆசிய கிண்ணக் கிரிக்கெட் தொடரையும் கைப்பற்றி அசத்தியது. இதனையடுத்து இலங்கை மகளிர் அணி அடுத்ததாக அயர்லாந்தில் சுற்றுப்பயணம் செய்து விளையாடவுள்ளது.

அதன்படி அயர்லாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இலங்கை மகளிர் அணியானது 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் மற்றும் T20 தொடரில் விளையாடவுள்ளது. அதன்படி இரு அணிகளுக்கும் இடையேயான T20 தொடரானது ஓகஸ்ட் 11 முதல் 16ஆம் திகதி வரையிலும், ஒருநாள் தொடரானது ஓகஸ்ட் 16ஆம் திகதி தொடங்கி 20ஆம் திகதி வரையிலும் நடைபெறவுள்ளது. மேற்கொண்டு மகளிர் T20 உலகக்கோப்பை தொடரின் முன்னோட்டமாக இலங்கை அணி இத்தொடரை எதிர்கொள்கிறது.

இந்நிலையில் இலங்கை அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 தொடர்களில் விளையாடும் அயர்லாந்து மகளிர் அணி நேற்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இத்தொடர்களுக்கான அயர்லாந்து அணியின் கேப்டனாக லாரா டெலானி நியமிக்கப்பட்டுள்ளார். மேற்கொண்டு கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, ஜேன் மாகுவேர் மற்றும் காரா முர்ரே ஆகியோர் T20 அணியிலும், ஜோனா லௌரன், ஐமி மாகுவேர் மற்றும் ஆலிஸ் டெக்டர் ஆகியோர் ஒருநாள் தொடருக்கான அணியில் மட்டுமே இடம்பிடித்துள்ளனர்.

அயர்லாந்து மகளிர் T20 அணி: லாரா டெலானி (த), அவா கேனிங், கிறிஸ்டினா கூல்டர் ரெய்லி, அலனா டால்செல், ஏமி ஹண்டர், ஆர்லீன் கெல்லி, கேபி லூயிஸ், ஜேன் மாகுவேர், காரா முர்ரே, லியா பால், ஓர்லா ப்ரெண்டர்காஸ்ட், உனா ரேமண்ட்-ஹோய், ஃப்ரேயா சார்ஜென்ட், ரெபேக்கா ஸ்டோகெல்.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x