இலங்கையில் வெளிநாட்டுக் கடன் மறுசீரமைப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதால் இடை நடுவில் நிறுத்தப்பட்டிருந்த கெடம்பே மேம்பாலத்தின் நிர்மாணப் பணிகளை மீள ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான கடனுதவி வழங்கும் ஹங்கேரிய அரசாங்கத்தின் பிரதிநிதிகளுடன் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுசன ஊடகத்துறை அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்த்தன கண்காணிப்பு விஜயத்தில் இணைந்துகொண்டார்.
ஹங்கேரி பிரதிநிதிகளுடனான பேச்சுவார்த்தை வெற்றியடைந்ததன் பின்னர், இந்தப் பாலத்தின் கட்டுமானப் பணிகள் விரைவில் ஆரம்பிக்கப்பட்டு முடிக்கப்படும் என்பதையும் அவரிடம் தெரிவித்தார்.
முதலீட்டு ஊக்குவிப்பு இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் கங்கநாத் ரூபசிங்க, ஹங்கேரி அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மார்டன் லாஸ்லோ இலங்கை ஹங்கேரியின் கௌரவ சபை (CEO – Betonutepito),
புதுடெல்லியில் உள்ள ஹங்கேரிய தூதரகத்தின் பொருளாதார மற்றும் வர்த்தக ஆலோசகர் லெவென்டே கார்டோஸ், வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் பிரியந்த சூரியபண்டார, திட்டங்களுக்குப் பொறுப்பான பணிப்பாளர் நலிந்த ரத்நாயக்க, வீதி அபிவிருத்தி அதிகார சபையின் நிறைவேற்று அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் கெடம்பே ராஜோபவனாராம விகாரையில் இலங்கை ராமக்ஞ்ஞ மகா நிக்காயாவின் அனுநாயக்கர் வணக்கத்துக்குரிய கெப்பிட்டியாகொட சிறி விமல நாயக்கரை தரிசித்து ஆசி பெற்றுக் கொண்டார்.