இலங்கை – இந்திய மீனவர் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. இக்குழுவில் இந்தியா சார்பில் நால்வரும், இலங்கையின் சார்பில் நால்வரும் நியமிக்கப்படவுள்ளனர். இந்த ஆய்வுக்குழு விரைவில் கூடவுள்ளதாக தமிழக மீனவர் பிரதிநிதிகள் மத்தியில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார். பா.ஜ.க. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமையில் தமிழக மீனவர் பிரதிநிதிகள் திங்களன்று புதுடில்லியில் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை சந்தித்து தமிழக மீனவர் பிரச்சினை தொடர்பான மனுவை வழங்கினர். இலங்கை கடற் பகுதியில் இலங்கை கடற்படை படகு மோதி உயிரிழந்த மீனவர் மற்றும் காணாமல் போன மற்றொரு மீனவர் குறித்தும், இராமநாதபுரத்தில் மீனவர்கள் போராட்டம் குறித்தும் பேசப்பட்டது. காணாமலான மீனவரை விரைந்து கண்டுபிடிக்க நடவடிக்கை எடுக்கவும், இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழக்கூடாது என்றும் மீனவர் கோரிக்கை விடுத்தனர். இலங்கை சிறையிலிருக்கும் இந்திய மீனவர் அனைவரையும் விரைவாக மீட்டுத் தர வேண்டும். இந்திய,இலங்கை பிரதிநிதிகள் சந்திப்பை இந்திய அரசு ஏற்படுத்தித் தர வேண்டும் உள்ளிட்டகோரிக்கைகளை இவர்கள் முன்வைத்தனர். இப்பிரச்சினைகள் அனைத்துக்கும் சுமுகமாக தீர்வுகள் காணப்பட்டு அனைவரும் தமிழகத்துக்கு பாதுகாப்பாக அழைத்து வரப்படுவரென மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
திருச்சி எம்.கே. ஷாகுல் ஹமீதுஇலங்கை இந்திய மீனவர் பிரச்சினைக்கு இருதரப்பு ஆய்வுக்குழுவின் ஊடாக தீர்வு
தமிழக மீனவரிடம் அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி
250
previous post