92
பருத்தித்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தும்பளை மாதா கோவில் வீதியிலுள்ள வீட்டுக் கிணற்றிலிருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் நேற்று திங்கட்கிழமை (05) காலை மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டவர் செபஸ்ரியாம்பிள்ளை டேவிட் உதயராசா (வயது- 47) என்ற இரண்டு பிள்ளைகளின் தந்தையாவார்.
வீட்டிலிருந்தவர்கள் நேற்றுமுன்தினம் ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்திலுள்ள மரண சடங்கு சென்றதாகவும் குடும்பஸ்தரும் மரண சடங்கு சென்று விட்டு வீடு வந்துள்ளார். ஞாயிற்றுக்கிழமை (04) இரவு கிணற்றில் தண்ணீர் எடுக்க மகள் சென்ற போது அவர் சடலமாக காணப்பட்டுள்ளார். மேலதிக விசாரணைக்காக சடலத்தை பிரேதபரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளார்.
(நாகர்கோவில் விசேட நிருபர்)