54
கோப்பாய் ஆசிரியர் கலாசாலையில் பயிற்சி பெற்று பரீட்சைத்திணைக்களத்தால் நடத்தப்பட்ட தேர்வில் சித்தியடைந்த ஆசிரியர்களுக்கான பயிற்சி சான்றிதழ் வழங்கும் விழா எதிர்வரும் 10ஆம் திகதி சனிக்கிழமை 9 மணிக்கும் 11.30 மணிக்கும் என இரண்டு அமர்வுகளாக கலாசாலை ரதிலட்சுமி மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் நடைபெறவுள்ள இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக இசுருபாய கல்வி அமைச்சின் கல்வி வெளியீட்டுத் திணைக்கள ஆணையாளர் நாயகம் தி. யோன்குயின்ரஸ் கலந்து கொள்வார்.
இந்நிகழ்வில் 238 ஆசிரியர்கள் பயிற்றப்பட்ட ஆசிரியர்களுக்குரிய தகைமைப் பத்திரங்களைப் பெறவுள்ளதாக கலாசாலை அதிபர் தெரிவித்தார்.
(கரவெட்டி தினகரன் நிருபர்)