சாவகச்சேரிப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நுணாவில் பகுதியில் அண்மையில் மூன்று வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்துக்குள்ளாகியுள்ளன.
கொடிகாமத்திலிருந்து யாழ்.நோக்கிச் சென்ற குறுந்தூர பயணிகள் பஸ் நுணாவில் பகுதியில் பயணி ஒருவரை ஏற்றுவதற்காக நிறுத்திய போது பின்னால் வந்த ஹயஸ் வாகனம் பஸ்ஸின் பின்புறமாக மோதியது. இதில் பஸ் கடுமையாக சேதமடைந்துள்ளது.
அதே நேரம் ஹயஸ் வாகனத்தின் பின்பாக வந்த டிப்பர் வாகனமும் ஹயஸ் வாகனத்தின் பின்புறமாக மோதியுள்ளது.
இதில் ஹயஸ் வாகனம் கடுமையாக சேதமடைந்த போதிலும் அதில் பயணித்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பியுள்ளனர்.
மேற்படி விபத்துத் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
(சாவகச்சேரி விசேட நிருபர்)