Home » கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் பாரிய பாதிப்பு

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக நெற்செய்கையில் பாரிய பாதிப்பு

by Gayan Abeykoon
August 6, 2024 1:13 am 0 comment

கிளிநொச்சி மாவட்டத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக நெற்செய்கையில் நோய்த்தாக்கம் அதிகரித்தமையால் விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

கிளிநொச்சி மாவட்டத்தில் இருபத்தி இரண்டாயிரத்து 781.25 ஏக்கர் நிலப்பரப்பில் சிறுபோக நெற்செய்கை மேற்கொள்ளப்பட்டது.

இதில் குடமுருட்டி குளத்தின் கீழ் மேற்கொள்ளப்பட்ட 330 ஏக்கர் நெற்செய்கை முழுமையான அறுவடை இம்மாத இறுதிக்குள் இடம்பெறவுள்ளன.

இவ்வாறு முன்னெடுக்கப்பட்டுள்ள சிறுபோக செய்கையில் பல்வேறுபட்ட நோய்த்தாக்கங்கள் ஏற்பட்டுள்ளன. அதாவது நெல் வயல்களில் தத்தி, மடிச்சுக்கட்டி, இலை சுருட்டி போன்ற நோய்களின் தாக்கம் அதிகளவில் காணப்படுகின்றன.

கடந்த கால போகத்திலும் இவ்வாறான நோய்த்தாக்கம் காரணமாக பெரும் அழிவுகளை சந்தித்த விவசாயிகள் இம்முறை சிறுபோகத்திலாவது ஓரளவு விளைச்சல் கிடைக்குமென எதிர்பார்த்திருந்தனர். எனினும் நோய்த்தாக்கம் அதிகரித்து வருகின்றமையால் விளைச்சல் பாதிக்கப்படுவதாக விவசாயிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்-.

(பரந்தன் குறூப் நிருபர்)

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x