95
ஆடி அமாவாசை பிதிர்க்கடன் நிறைவேற்றும் பூஜை வழிபாடுகள் யாழ்.கீரிமலை நகுலேஸ்வரர் ஆலயத்திலும் கீரிமலை கண்டகி தீர்த்த கரையிலும் நேற்றுமுன்தினம் சிறப்பாக நடைபெற்றது.
தந்தையை இழந்தவர்கள் பிதிர்க்கடன் செலுத்தும் விரதமான ஆடி அமாவாசை விரதத்தை முன்னிட்டு யாழ்ப்பாணம் கீரிமலை கடற்கரையில் விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன. தந்தையை இழந்தவர்கள் தமது பிதிர்க்கடன்களை செலுத்தி கடலில் நீராடினார்கள்.
(யாழ். விசேட நிருபர்)