வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மற்றும் தொழிலமைச்சும் இணைந்து கொழும்பு மாவட்டத்தில் உள்ள 100க்கும் மேற்பட்ட பிரதேச ஊடகவியலாளர்களுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு பற்றிய ஊடகப் பயிற்சிக் கருத்தரங்கொன்றை (28) பத்தரமுல்லையில் நடாத்தியது.
இந் நிகழ்வுக்கு வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் மற்றும் தொழிலமைச்சர் மனுச நாணயக்கார ஆகியோர் அதிதியாகக் கலந்து கொண்டு ஊடகப் பயிற்சி பட்டறையை ஆரம்பித்து வைத்தனர்.
இலங்கையிலிருந்து வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காக செல்பவர்கள் அங்கு அந்நிய செலாவணியை சம்பாதித்து இலங்கையில் சிறந்து மேலோங்கும் குடும்பங்களை நேர்கண்டு அவற்றினை சிறந்த முறையில் செய்திகளாக தேசிய தொலைக்காட்சிகள், பத்திரிகைகளில் வெளிக்கொணர்வது தொடர்பாக இங்கு விளக்கமளிக்கப்பட்டன.
(அஷ்ரப் ஏ. சமத்)