சமீப காலமாகவே பாலிவுட் திரைத்துறையில் ஐஸ்வர்யாராய் மற்றும் அபிஷேக் பச்சனின் விவாகரத்து தொடர்பான பேச்சுக்கள்தான் அதிகமாக சென்று கொண்டே இருக்கின்றன. முக்கியமாக பாலிவுட் முழுக்கவும் இதுதான் இப்பொழுது பேச்சாக இருக்கிறது.
சமீபத்தில் ஆனந்த் அம்பானியின் திருமணம் நடந்த பொழுது அந்த திருமண விழாவிற்கு ஐஸ்வர்யாராயும் அபிஷேக் பச்சானும் தனித்தனியாக வந்திருந்தனர். அந்த திருமணத்திற்கு வந்த ஜோடிகள் அனைவருமே சேர்ந்து வந்த பொழுது இவர்கள் மட்டும் தனித்தனியாக வந்திருந்தனர்.
இந்த திருமண விழா மட்டுமின்றி சமீபத்தில் நடந்த நிறைய விழாக்களுக்கு அபிஷேக் பச்சனும், ஐஸ்வர்யா ராயும் தனியாக வந்துதான் கலந்து கொண்டிருந்தனர். இதனால் இவர்கள் இருவரும் பிரிய போகிறார்கள் என்கிற பேச்சு பாலிவுட் சினிமாவில் அதிகரிக்க துவங்கியிருக்கிறது.அதற்கு தகுந்தார் போல சமீபத்தில் ஒரு எழுத்தாளர் விவாகரத்துக்கு ஆதரவாக போட்டிருந்த பதிவிற்கு லைக் செய்திருந்தார் அபிஷேக் பச்சன். அதனை தொடர்ந்து அபிஷேக் விவாகரத்துக்கு தயாராகதான் இருக்கிறார் என்றெல்லாம் பேச்சுக்கள் இருந்து வந்தன.
ஆனால் குடும்பத்திலும் இது சம்பந்தமாக தகராறு இருந்ததுதான் தற்சமயம் இவர்கள் பிரிவிற்கு காரணமாக இருக்கிறது என்று பயில்வான் ரங்கநாதன் ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார். அதில் அவர் கூறும் பொழுது அபிஷேக் பச்சன் ஐஸ்வர்யா ராயை திருமணம் செய்து கொள்வதில் அமிதாப் பச்சனுக்கு விருப்பமே இல்லை.
ஏனெனில் ஐஸ்வர்யா ராய் திருமணத்திற்கு முன்பே விவேக் ஓப்ராய், சல்மான் கான் போன்ற நடிகர்களுடன் உறவில் இருந்தார். இதனால் விருப்பம் இல்லாவிட்டாலும் தன்னுடைய மகன் ஆசைக்காக திருமணத்திற்கு ஒப்புக்கொண்டார்.திருமணத்திற்கு பிறகும் ஐஸ்வர்யாராயை முழுமையாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை. இதற்கு நடுவே மும்பையில் ஒரு பெரிய சொகுசு வீட்டை கட்டி இருக்கிறார் அமிதாப் பச்சன். பணக்காரர்கள் வசிக்கும் பகுதியில் அந்த வீடு கட்டப்பட்டுள்ளது. பல கோடி ரூபாய் மதிப்புள்ள அந்த வீட்டை அமிதாப்பச்சன் தன்னுடைய மகள் ஸ்வேதா நந்தாவிற்கு கொடுத்துவிட்டார்.
இது ஐஸ்வர்யா ராய்க்கு அதிக கோபத்தை ஏற்படுத்தியது. இதனாலேயே அவர் வீட்டில் உள்ள யாரிடமும் பேசாமல் ஐஸ்வர்யா தனியாக இருந்து வருவதாக கூறப்படுகிறது. இதற்கு நடுவே நடிகர் அபிஷேக் வேறு ஒரு நடிகையுடன் தொடர்பு இருப்பதாகவும் பேச்சுக்கள் இருக்கின்றன. இதுவும் குடும்பத்தில் விரிசல் ஏற்பட காரணமாக இருப்பதாக கூறுகிறார் ரங்கநாதன்.
இந்த மாதிரியான காரணங்கள் எல்லாம் சேர்ந்துதான் தற்சமயம் ஐஸ்வர்யா ராய் அபிஷேக் பச்சனை பிரிவதற்கு முடிவு செய்து இருப்பதாக அவர் கூறுகிறார்.