இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள குறித்த STEM ஆசிரியர்களையும் இன்று (06) சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் இணைந்து நடாத்தும் பெருந்தோட்டத்துறையின் ஆசிரியர்களுக்கான கல்வி மேம்பாட்டுத் திட்டம் “அறிவெழுச்சி” (VIDHYAWARDANA) நேற்று (05) ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், இந்திய உயர்ஸ்தானிகர் காரியாலயம், நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சு, கல்வி அமைச்சு, மற்றும் இலங்கை தேசிய கல்வி நிறுவனம் ஆகியவற்றின் ஒழுங்குப்படுத்தலுடன் இடம்பெற்ற இந்நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான் அவர்கள் பங்கேற்றிருக்கவில்லை.
ஜனாதிபதி தேர்தல் காலங்களில் அமைச்சர்கள் பங்குகொள்ளும் நிகழ்வுகளுக்கு தேர்தல்கள் ஆனைக்குழு தடை விதித்துள்ளமையை கருத்திற்கொண்டு, முன்மாதிரியாக செயற்பட்டே இந்நிகழ்வில் அமைச்சர் ஜீவன் தொண்டமான் கலந்துக்கொண்டிருக்கவில்லை.
இதனிடையே இந்தியாவில் இருந்து வருகை தந்துள்ள குறித்த STEM ஆசிரியர்களையும் இன்று சந்தித்து கலந்துரையாடலில் ஈடுபட்டார்.
குறிப்பாக வருகை தந்துள்ள (STEM) ஆசிரியர்களால், பெருந்தோட்ட ஆசிரியர்களின் மேம்பாட்டு திட்டத்தினை கொண்டுவந்தமைக்காக அமைச்சர் அவர்களுக்கு நன்றியும், பாராட்டும் தெறிவிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சர் ஜீவன் தொண்டமான், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மருதபாண்டி ராமேஸ்வரன், அமைச்சரின் ஆலோசகர் ஹரித்த விக்ரமசிங்க, பிரத்தியேக செயலாளர் மொகமட் காதர் உட்பட அமைச்சின் அதிகாரிகளும் கலந்துக்கொண்டிருந்தனர்.