சர்வதேச பழங்குடியினர் தினத்தை முன்னிட்டு மூதூர் பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட மலைமுந்தல் கிராமத்தில் இன்று (06) கரையோர பழங்குடிகளுக்கான தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
சிவில் அமையத்தின் அனுசரணையில் திருகோணமலை மாவட்ட குவேனி பழங்குடி அமைப்பின் ஏற்பாட்டில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில், பழங்குடி மக்கள் தங்களின் வாழ்க்கைமுறை தொடர்பான காட்சிப்படுத்தலையும், நிகழ்வுகளையும் மேற்கொண்டிருந்தார்கள்.
அத்துடன் பழங்குடி மக்கள் அரசியல் பொருளாதார சமூக கலாசார பண்பாட்டு ரீதியாக எதிர்கொள்ளும் சவால்களுக்கான தீர்வுகள் தொடர்பாக இருபது பரிந்துரைகள் அடங்கிய மகஜரும் வருகை தந்திருந்த உயர் அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டிருந்தது.
குறித்த நிகழ்வில் மூதூர் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், கிழக்கு மாகாண சுற்றுலாத்துறைப் பணிப்பாளர், மனித உரிமைகள் ஆணைக்குழுவின் திருகோணமலை பிராந்திய இணைப்பாளர், மாவட்ட கலாசார உத்தியோகத்தர் உட்பட பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
(துரைநாயகம் சஞ்சீவன்)