ஈரான் அரசியல் பிரிவு தலைவர் இஸ்மைல் ஹனியே ஈரான் தலைநகர் டெஹ்ரானில் அவர் தங்கி இருந்த விருந்தினர் இல்லத்திற்கு வெளியில் இருந்து வீசப்பட்ட ‘குறுகிய தூர ஏவுகணை’ தாக்கியே கொல்லப்பட்டிருப்பதாக ஈரான் புரட்சிக் காவல்படை தெரிவித்துள்ளது.
‘இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளின்படி சுமார் 7 கிலோ வெடிபொருட்களை சுமந்த குறுகிய தூர ஏவுகணை ஒன்றின் மூலம் அவர் தங்கி இருந்த விருந்தினர் இல்லத்திற்கு வெளியில் இருந்து ஹனியேவுக்கு எதிராக தாக்குதல் நடத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது’ என்று ஈரான் புரட்சி காவல்படை நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ஈரான் ஜனாதிபதியின் பதவி ஏற்பு நிகழ்வில் பங்கேற்பதற்கு சென்றபோது ஹனியே கடந்த வார ஆரம்பத்தில் படுகொலை செய்யப்பட்டார். இஸ்ரேல் வகுத்துக் கொடுத்த திட்டம் அமெரிக்காவின் ஆதரவோடு செயல்படுத்தப்பட்டதாக ஈரான் குற்றஞ்சாட்டியது.
ஹனியேவின் மரணம் குறித்து இஸ்ரேல் இதுவரை எதுவும் கூறவில்லை. அவர் கொல்லப்பட்டதற்குப் பின் ஈரானிய இராணுவ அதிகாரிகள் பலர் கைது செய்யப்பட்டு அல்லது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர் என்று நியூயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.
ஈரானிய உளவுத்துறை ஹனியே மரணம் குறித்து தற்போது விசாரணை நடத்துவதாக அது குறிப்பிட்டுள்ளது.
அவர் தங்கியிருந்த வீட்டின் பாதுகாவலர்கள் விசாரிக்கப்படுகின்றனர். அவர்களின் கைத்தொலைபேசிகள் உள்ளிட்ட மின்னிலக்கச் சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஈரானிய அரசியல் தலைவர்களுக்கான பாதுகாப்பு நடைமுறை முழுமையாக மாற்றியமைக்கப்பட்டுள்ளதாகவும் அந்தப் பத்திரிகை செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹனியேவுக்கு பதில் புதிய தலைவர் ஒருவரை தேர்வு செய்யும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருப்பதாக அந்த அமைப்பு நேற்று முன்தினம் வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.