Monday, October 7, 2024
Home » சோபர் அணி வெற்றி

சோபர் அணி வெற்றி

by damith
August 5, 2024 2:20 pm 0 comment

மகிழூர்முனை நியு எவரெஸ்ட் விளையாட்டுக் கழகத்தின் ஏற்பாட்டில் அமரர் வேலுப்பிள்ளை பத்மநாதன் ஞாபகார்த்த கிண்ண மின்னொளி கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் அட்டாளைச்சேனை சோபர் விளையாட்டு கழகம் சம்பியனானது.

கடந்த 10 தினங்களாக 64 அணிகளின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தத் தொடரின்; இறுதிப் போட்டி கடந்த வியாழனன்று நடைபெற்றதோடு அதில் மட்டக்களப்பு ஈஸ்ரன் சலஞ்சேஸ் அணியை எதிர்கொண்ட சோபர் கழகம் 5 விக்கெட்டுகளால் வெற்றியீட்டியது.

தொடரின் சிறந்த துடுப்பாட்ட வீரராக சோபர் கழகத்தின் முகம்மது அக்ரமும், இறுதிப்போட்டியில் சிறந்த வீரராக அந்தக் கழகத்தின் அஸ்ஜதும் தெரிவாகினர்.

ஒலுவில் கிழக்கு தினகரன் நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x