பாரிஸ் ஒலிம்பிக்கில் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியில் ஜூலியன் அல்பிரட் வெற்றியீட்டி ஒலிம்பிக் வரலாற்றில் செயின்ட் லூசியாவுக்கு முதல் பதக்கத்தை வென்றுகொடுத்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் அதிவேக வீராங்கனையை தேர்வு செய்யும் பெண்களுக்கான 100 மீற்றர் ஓட்டப்போட்டியின் இறுதிப் போட்டி நேற்று முன்தினம் நடைபெற்றபோது எவரும் எதிர்பார்க்காத வகையில் அல்பிரட் போட்டித் தூரத்தை 10.72 விநாடிகளில் நிறைவு செய்து தங்கப் பதக்கத்தை வென்றார்.
அமெரிக்காவைச் சேர்ந்த உலக சம்பியன் ஷக்கரி ரிச்சட்சன் 10.87 விநாடிகளில் வெள்ளிப் பதக்கத்தை வென்றதோடு அவரின் போட்டியாளரான அமெரிக்காவின் மெலிஸா ஜெப்பர்ஸன் (10.92 விநாடி) மூன்றாவது இடத்தைப் பிடித்தார்.