புத்தளம், கனமூலை அரசினர் முஸ்லிம் மகா வித்தியாலயத்தின் கேட்போர் கூட நிர்மாணம் மற்றும் உள்ளக பாதை அபவிருத்தி வேலைத்திட்டத்திற்கு பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தனது பன்முகப்படுத்தப்பட்ட நிதியின் கீழ் ரூ. 37.5 இலட்சம் நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார். இவ்வேலைத்திட்டம் தற்பொழுது ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு அன்மையில் பாடசாலையின் அதிபர் பீ.எம். முஸ்னி தலைமையில் நடைபெற்றது.
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் கலந்து சிறப்பித்தார்.
அத்துடன் பாராளுமன்ற உறுப்பினரின் பிரத்தியேக செயலாளர் ஜவ்சி, இணைப்பாளர் அமீர் அலி ஆசிரியர் உட்பட பாடசாலை நிர்வாகிகள், பெற்றோர்கள், பழைய மாணவர்களும் கலந்துகொண்டனர்.