Monday, November 4, 2024
Home » முகம் சுழிக்க வைத்த ராயன்.. தனுசுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு..!

முகம் சுழிக்க வைத்த ராயன்.. தனுசுக்கு எதுக்கு இவ்ளோ பில்டப்பு..!

விளாசும் பிரபலம்!

by damith
August 5, 2024 10:55 am 0 comment

இரு நாட்கள் முன்பு திரையில் வெளியாகி அதிகமாக பேசப்பட்ட திரைப்படமாக தனுஷ் நடித்த ராயன் திரைப்படம் இருந்தது. ராயன் திரைப்படத்தை தனுஷே இயக்கி அதில் நடித்திருக்கிறார். இது தனுஷின் ஐம்பதாவது திரைப்படம் ஆகும். 50 வது திரைப்படம் கண்டிப்பாக ஒரு வெற்றி திரைப்படமாக இருக்க வேண்டும் என்பதாலேயே இந்த திரைப்படத்தை தனுஷ் இயக்கி இருக்கிறார் மேலும் படத்தின் வரவேற்பை அதிகரிப்பதற்காக நிறைய முக்கிய நட்சத்திரங்களை படத்தில் நடிக்க வைத்திருக்கிறார்.முக்கிய நட்சத்திரங்கள்:

அந்த வகையில் இந்த திரைப்படத்தில் அவரது அண்ணனான செல்வராகவனும் நடித்திருக்கிறார். இந்த நிலையில் முதல் நாளே ராயன் திரைப்படம் நிறைய எதிர்மறையான விமர்சனங்களுக்கு உள்ளானது. இந்த நிலையில் படத்தில் வரும் நிறைய காட்சிகள் முரணானதாக இருக்கிறது.

தனுஷ் படத்தை இயக்குவதில் நிறைய கோட்டை விட்டுவிட்டார் என்று பேச்சுக்கள் இருந்து வருகின்றன. அப்படி தனுஷ் எந்த விஷயங்களை எல்லாம் அதில் கோட்டை விட்டார் என்று பட்டியலிட்டு கூறியிருக்கிறார் பிரபல சினிமா விமர்சகரான செய்யாறு பாலு.

அதில் அவர் கூறும் பொழுது படத்தின் ஆரம்பகாட்சியிலேயே தனுஷின் தாய் தந்தையர் அவரை விட்டுவிட்டு டவுனுக்கு செல்வதாக ஒரு காட்சி வரும் அதற்குப் பிறகு அவர்கள் திரும்ப வரவே மாட்டார்கள். தனுஷும் அவரது உடன் பிறந்தவர்களும் பிறகு வேறு இடத்திற்கு நகர்ந்து சென்று விடுவார்கள்.படத்தில் இருந்த தவறு:

ஆனால் படத்தின் இறுதிவரை அந்த அம்மா அப்பா என்ன ஆனார்கள் என்பதை தனுஷ் காட்டவே இல்லை. அவர் அதை சுத்தமாக மறந்து விட்டார் அதேபோல ஒரு காட்சியில் தனுஷ் பத்து வருடத்திற்கு முன்பு ஏற்கனவே ஒரு பெரும் பிரச்சனை செய்ததாக வில்லன் கூறுவது போன்ற காட்சி ஒன்று வரும்.

ஆனால் பத்து வருடத்திற்கு முன்பு என்ன தனுஷ் செய்தார் என்பது தெரியாத விஷயமாக இருக்கிறது. பாட்ஷா படத்தில் வருவது போல ஆரம்ப கட்டம் முதலே தனுஷ்கான பில்டப் அதிகமாக இருக்கிறது. சரி அவர் பழைய கதையில் ஏதோ ஒன்று பெரிதாக செய்திருப்பார் என்று மக்களும் எதிர்பார்க்கத் துவங்குகின்றனர்.இதையும் படிங்க : 5 வயசு புள்ளக்கூட இதை விட பெரிய கெவுன் போட்டுருக்கும்!.. தொடை அழகில் மெர்சல் காட்டும் நடிகை ஐஸ்வர்யா மேனன்!.ஆனால் இறுதிவரை அவர் என்னதான் செய்தார் என்பதை படத்தில் காட்டவே இல்லை. அது மக்களுக்கு ஒரு பெரும் அதிருப்தியாக முடிந்து விட்டது அதேபோல தனுஷின் தம்பியை விரட்டி விரட்டி காதலிக்கும் ஒரு பெண் கதாபாத்திரம் இருக்கும். அந்தப் பெண் குடிசை பகுதியை சேர்ந்த பெண்ணாக இருக்கும்.

ஒரு காட்சியில் குடித்துவிட்டு வரும் தனுஷின் தம்பி அந்த பெண்ணின் தந்தையை வெளியில் தள்ளிவிட்டு அந்த பெண்ணிடம் மதுவை கொடுப்பார் உடனே அந்த பெண்ணும் அதை குடித்து விட்டு அவனுடன் சேர்ந்து நடனம் ஆடுவாள். இதன் மூலமாக குடிசை பகுதியில் வாழும் பெண்கள் சரக்கு அடிக்க கூடியவர்கள் என்று காட்ட விரும்புகிறாரா தனுஷ் என்று பலவகையான கேள்விகளை எழுப்பி இருக்கிறார் செய்யாறு பாலு.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x