செப்டெம்பர் 21ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தபால் வாக்களிப்புக்குத் தகுதியான அரச ஊழியர்களின் தபால் மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க இவ்வறிவித்தலை விடுத்துள்ளார்.
விண்ணப்பங்கள் கிடைக்கும்போது ஏற்படக்கூடிய காலதாமதங்களைத் தவிர்க்குமுகமாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, இன்று (05) நள்ளிரவு 12.00 மணியுடன் முடிவடையவிருந்த தபால் மூல வாக்களிப்பு விண்ணப்பங்களை ஏற்றுக்கொள்வதற்கான திகதி எதிர்வரும் வெள்ளிக்கிழமை ஓகஸ்ட் 09 ஆம் திகதி நள்ளிரவு 12.00 மணி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
விண்ணப்பங்கள் குறித்த இறுதித் திகதியில் நள்ளிரவு 12.00 மணிக்குள் உரிய மாவட்ட தேர்தல்கள் அலுவலகங்களை வந்தடைய வேண்டுமென அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத்துடன், ஓகஸ்ட் 08, 09 ஆகிய இரு தினங்களிலும், உரிய விண்ணப்பங்களை தபாலுக்காக ஒப்படைக்காமல், மாவட்ட வாரியாக பிரித்து, அத்தாட்சிப்படுத்தும் அலுவலகத்திற்கு நேரில் வந்து ஒப்படைக்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தபால்மூல வாக்களிப்பு; விண்ணப்பங்களை ஏற்கும் பணி இன்றுடன் நிறைவு