Wednesday, September 11, 2024
Home » பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு

- 2019 ஓகஸ்ட் 05 ஜம்மு - காஷ்மீர் இந்திய ஆக்கிரமிப்பு, நடவடிக்கை நினைவுதினம்

by Rizwan Segu Mohideen
August 5, 2024 6:10 pm 0 comment

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் 2019 ஓகஸ்ட் 05ஆம் திகதி இந்தியா மேற்கொண்ட சட்டவிரோத மற்றும் ஒருதலைப்பட்ச நடவடிக்கைகளைக நினைவூட்டும் வகையில் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயத்தினால் இன்று (05) அனுஷ்டிக்கப்பட்டது.

இங்கு முக்கியப் பேச்சாளர்கள் காஷ்மீரிகளின் அவல நிலையைப் சுட்டிக்காட்டியதோடு இந்த சர்ச்சையானது ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலின் நிகழ்ச்சி நிரலில் உள்ள பழமையான விஷயங்களில் ஒன்று என்றும் அவர்கள் தெரிவித்தனர். துரதிர்ஷ்டவசமாக, இந்தியா தனது உறுதிமொழிகளை மதிக்க மறுப்பதாலும், அடிப்படை மனித உரிமைகள் மற்றும் சர்வதேச சட்டங்களை மதிக்காததாலும் இந்த சர்ச்சை இன்னும் தீர்க்கப்படாமல் உள்ளது.

மனிதாபிமானமற்ற இராணுவ முற்றுகை, தகவல் தொடர்பு முற்றுகை, சுற்றிவளைப்பு மற்றும் தேடுதல் நடவடிக்கைகள், போலி என்கவுன்டர்கள் மூலம் அப்பாவி காஷ்மீரிகள் மீதான அடக்குமுறை மற்றும் மிருகத்தனமான தாக்குதலை உயர் ஸ்தானிகர் ஓய்வு பெற்ற மேஜர் ஜெனரல் ஃபஹீம் உல் அஸீஸ் தனது உரையில் சுட்டிக்காட்டினார்.

மேலும், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரி, பிரதமர் முகமது ஷேபாஸ் ஷெரீப், வெளியுறவு அமைச்சர் இஷாக் தர் ஆகியோரின் இந்நாள் குறித்த செய்திகளும் வாசிக்கப்பட்டன.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT

Hutch Hutch
x