கிழக்குப் பாதுகாப்புப் படைத் தளபதியின் கருத்து மற்றும் வழிகாட்டலின் கீழ் படைத்தலைமையகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட சிங்கள மொழிப் பாடநெறிக்கான பரிசளிப்பு விழா கடந்த வியாழக்கிழமை (03) கொக்கட்டிச்சோலை கலாசார நிலையத்தில் நடைபெற்றது.
இந்த மொழிப் பாடநெறி 2024 ஜனவரி 06 ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்டதுடன், தமிழ் மாணவர்களின் சிங்கள மொழித் திறனையும் சிங்கள மாணவர்களின் தமிழ் மொழித் திறனையும் மேம்படுத்துவதன் மூலம் தேசிய மத மற்றும் கலாசார நல்லிணக்கத்தை மேம்படுத்துவதும் பரஸ்பர ஒத்துழைப்பை மேம்படுத்துவதும் இதன் நோக்கமாகும். மட்/இராமகிருஷ்ணா வித்தியாலயம் மற்றும் மட்/முதலிக்குடா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த 115 தமிழ் மாணவர்கள் இப்பயிற்சியில் கலந்துகொண்டனர்.
தமிழ் மற்றும் சிங்கள மாணவர்களிடையே நட்புறவையும் பரஸ்பர புரிந்துணர்வையும் வளர்ப்பதே இந்த பாடநெறியின் முக்கிய நோக்கமாக இருந்தது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கிழக்கு பாதுகாப்பு படைத் தலைமையகத் தளபதி மேஜர் ஜெனரல் எஸ்.ஏ. குலதுங்க கலந்துகொண்டதுடன், அங்கு உரையாற்றிய அவர், சகவாழ்வை மேம்படுத்துவதற்கு பரஸ்பர மொழிகளைப் ஒருவருக்கொருவர் புரிந்துகொள்வதன் முக்கியத்துவத்தை விளக்கினார்.
மாணவர்கள் இவ்வாறான சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொண்டு தமது மொழித் திறனை மேலும் வளர்த்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார். நாட்டில் சமாதானத்தையும் நல்லிணக்கத்தையும் மேம்படுத்தும் செயற்பாட்டில் இலங்கை இராணுவம் தொடர்ந்து முன்னோடியாக செயற்பட்டு வருவதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் மெதடிஸ்ட் திருச்சபையின் வண. எபினேசர் ஜோசப் ஆண்டகை, கொக்கட்டிச்சோலை கோட்ட கல்விப் பணிப்பாளர், சிரேஷ்ட அதிகாரிகள், அதிகாரிகள் மற்றும் இராணுவ சிப்பாய்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.